ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
500 ரூபாய் நோட்டை எடுத்து மாணவர்களிடம் காட்டியவர்,
''இந்தப் பணம் வேண்டும் என்பவர்கள் கையை உயர்த்தலாம்!'' என்றார்.
ஏறக்குறைய எல்லோரும் கையை உயர்த்தினர். பிறகு,
அந்த ரூபாய் நோட்டைச் சுருட்டி- கசக்கிய ஆசிரியர்,
அதை உயர்த்திப் பிடித்து மீண்டும் கேட்டார்:
''யாருக்கு இது வேண்டும்?'' இப்போதும் எல்லோரும் கையை உயர்த்தினர்.
ஆசிரியர், ரூபாய் நோட்டை மேலும் கசக்கினார்.
பிறகு, மிகவும் அழுக்கடைந்த அந்த ரூபாய் நோட்டை விரித்துப் பிடித்தபடி,
''யாருக்காவது இது வேண்டுமா?'' என்று கேட்டார்.
இந்த முறையும் அனைவரும் கையை உயர்த்தினர். ` இப்போது அந்த ஆசிரியர் சிரித்தபடி கூறினார்:
''முதல் முறை நான் காட்டிய புத்தம் புதிய நோட்டின் மதிப்பு ஐநூறு ரூபாய்.
நோட்டை சுருட்டிக் கசக்கினாலும் கீழே போட்டு அழுக்காக்கியபோதும்
அதன் மதிப்பு சற்றும் குறையவில்லை. `
இதுபோன்றே நமது வாழ்க்கையும்.
சோதனைகள், துன்பங்கள், இழப்புகள், தோல்விகள், அவமானங்கள் என்று
எவ்வளவு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டாலும் நமது உண்மையான மதிப்பு
ஒருபோதும் குறைவதில்லை. இந்த உண்மையை உணர்ந்தால்,
அதுவே ஒரு பெரிய தூண்டுகோலாகி... எந்த நிலையில் இருந்தாலும் தளராமல் உழைத்து,
தடைகளைத் தாண்டி நாம் முன்னேற உதவும்!'' ` சுய மதிப்பும், தன்னம்பிக்கையுமே குறிக்கோள்களை நோக்கி
நம்மை ஊக்குவிக்கும் பெரும் தூண்டுகோல்கள் ஆகும்.